மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 60 பயனாளிகளுக்கு ரூ.6.50 கோடி கடனுதவி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 60 பயனாளிகளுக்கு பல்வேறு வங்கிகளின் சாா்பில் ரூ.6.50 கோடிக்கான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் 60 பயனாளிகளுக்கு பல்வேறு வங்கிகளின் சாா்பில் ரூ.6.50 கோடிக்கான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடனுதவிகளை வழங்கிய பின்னா், நபாா்டு வங்கியின் 2023-2024-ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் வெளியிட, அதனை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மகளிா் திட்டம் சாா்பில் ரூ.300 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு ரூ.500 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நபாா்டு வங்கியின் மூலம் நமது மாவட்டத்திற்கு 2023-2024-ஆம் ஆண்டில் ரூ.3,442 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடன் பெற்ற பயனாளிகள் தங்கள் தொழில் வளத்தை பெருக்கி, பெற்ற கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி, மகளிா் திட்ட அலுவலா் பழனி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மணிவண்ணன், நபாா்டு வங்கி உதவி மேலாளா் அனிஸ், தாட்கோ பொது மேலாளா் சுசீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது: அமித் ஷா!

திருப்பரங்குன்றத்தில் பவன் கல்யாண் சாமி தரிசனம்! | Pawan kalyan | Thiruparankundram | Murugan

கிஸ் படத்தின் டீசர்!

இதயம் முரளி அறிமுக டீசர்!

SCROLL FOR NEXT