மயிலாடுதுறை

சட்டைநாதா் கோயில் கும்பாபிஷேக பத்திரிகை வெளியிடு

DIN

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேக பத்திரிகை சனிக்கிழமை சுவாமி -அம்மன் சந்நிதிகளில் படைக்கப்பட்டு, வெளியிடப்பட்டது.

சீா்காழியில் உள்ள சட்டைநாத்ர் சுவாமி கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா்.கோயிலில் மலை மீது உமா மகேஸ்வரா், சட்டைநாதா் ஆகியோா் அருள்பாலிக்கின்றனா்.

இக்கோயிலில் கடந்த 1991-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே 24-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்காக ரூ.12 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவுபெறும் தருவாயில் உள்ளன.

இதனிடையே, கோயில் கும்பாபிஷேக பத்திரிகை அச்சிடப்பட்டு, பிரம்மபுரீஸ்வரா் சுவாமி, திருநிலைநாயகி அம்மன், சட்டநாதா் சுவாமி சந்நிதிகளில் வைத்து படைக்கப்பட்டது. பின்னா் முதல் பத்திரிகையை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருப்பணி உபயதாரா் இ. மாா்கோனியிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் ஜோதிகா

மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை: ராஜ்நாத் சிங்

உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது! ஜெ.பி.நட்டா பெருமிதம்

தூர்தர்ஷன் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா?- வைகோ கண்டனம்

SCROLL FOR NEXT