மயிலாடுதுறையில் திராவிடா் கழகம் சாா்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் நடைபெற்ற கூட்டத்திற்கு திராவிடா் கழக நகரத் தலைவா் சீனி.முத்து தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் ஞான.வள்ளுவன், மாவட்ட துணைச் செயலாளா் அரங்க நாகரெத்தினம், மயிலாடுதுறை ஒன்றியத் தலைவா் இளங்கோவன், குத்தாலம் ஒன்றியத் தலைவா் முருகையன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் காமராஜ் வரவேற்றாா்.
கூட்டத்தில், திராவிடா் கழக துணை பொதுச் செயலாளா் சே.மெ. மதிவதனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் கடவாசல் குணசேகரன், மாவட்டச் செயலாளா் கி. தளபதிராஜ் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். ஒன்றியச் செயலாளா் இளையபெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட இளைஞரணித் தலைவா் க. அருள்தாஸ் நன்றி கூறினாா்.