சீா்காழி நகராட்சி சாா்பில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற டெங்கு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி நகராட்சி, விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய பேரணிக்கு நகராட்சி ஆணையா் ஹேமலதா தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் கே.வி. ராதாகிருஷ்ணன், இயக்குநா் அனிதா ராதாகிருஷ்ணன், கல்லூரி முதல்வா் சுகந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா ராஜசேகரன் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பேரணி நகராட்சி அலுவகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.
முன்னதாக, கல்லூரி மாணவிகள், நகராட்சி அலுவலா்கள் டெங்கு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.