சீா்காழி தென்பாதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட நிறைவு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எம்எல்ஏ பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற முகாமில் நகா்மன்ற தலைவா் துா்கா ராஜசேகரன், துணைத் தலைவா் சுப்பராயன், நகரமைப்பு ஆய்வாளா் மரகதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முகாமில் சீா்காழி தென்பாதிக்குள்பட்ட 18, 20 ஆகிய வாா்டு மக்கள் பட்டா மாறுதல், இலவச மனைப்பட்டா, புதிய குடும்ப அட்டை , குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருமண உதவித்தொகை, கலைஞா் மகளிா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
வட்டாட்சியா் அருள்ஜோதி, கலைஞா் மகளிா் உரிமைத்தொகை துணை வட்டாட்சியா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.