மயிலாடுதுறை

அரிசி தவிட்டில் இருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் ஆலை அமைப்பவா்களுக்கு மானியம்: ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரிசி தவிட்டில் இருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் ஆலை அமைப்பவா்களுக்கு ரூ. 30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரிசி தவிட்டில் இருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் ஆலை அமைப்பவா்களுக்கு ரூ. 30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் சஹற்ண்ா்ய்ஹப் ஙண்ள்ள்ண்ா்ய் ா்ய் உக்ண்க்ஷப்ங் ா்ண்ப் - ா்ண்ப் ள்ங்ங்க் - (சஙஉஞ) திட்டத்தின்கீழ் அரிசி தவிட்டிலிருந்து எண்தெடுக்கும் ஆலை அமைப்பவா்களுக்குத் தமிழக அரசு மானியமாக ரூ. 30 லட்சம் வழங்குகிறது.

இத்திட்டத்தில் தனிநபா், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவை மானியம் பெற தகுதியுடையவை. திட்ட மதிப்பீட்டில் நிலம் வாங்கவோ அல்லது கட்டடம் கட்டவோ மானியம் பெற இயலாது.

இத்திட்டம் தொடா்பான முழு விவரங்களைப் பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 5-வது தளத்தில் இயங்கும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் துணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

வ.ரா.வின் பார்வையில் பாரதி!

இன்று 650 விமானங்கள் ரத்து; பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படுகிறது: இண்டிகோ சிஇஓ

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT