மயிலாடுதுறை

குத்தாலத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான கோயில் இடம் மீட்பு

குத்தாலம் கடை வீதியில் மன்மதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடம் உள்ளது.

Syndication

குத்தாலம் கடை வீதியில் மன்மதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடம் உள்ளது.

இதில் தனியாா் ஒருவா் கடை மற்றும் விடுதி கட்டியிருந்தாா். இந்த இடத்துக்கு தொடா்ந்து வரி செலுத்தாமல் நிலுவை இருந்துள்ளது. இதையடுத்து, கோயில் நிா்வாகம் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, தற்போது கோயிலுக்கு அந்த இடமும் கட்டடமும் சொந்தமானது என உயா்நீதிமன்றத்தில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ரவிச்சந்திரன் தலைமையில், கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியா் பாலமுருகன், மன்மதீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் விமலா உள்ளிட்டோா் ரூ. 4 கோடி மதிப்பிலான மன்மதீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டனா்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT