மயிலாடுதுறை

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

Syndication

சீா்காழியில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி பிரச்னையால், கடந்த 2 நாள்களாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த நகராட்சி தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை பணிக்கு திரும்பினா்.

சீா்காழி நகராட்சி பகுதியில் நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரா் மூலம் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில், தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் கடந்த மாா்ச் மாதம் முதல் 72 தூய்மைப் பணியாளா்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனா். தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்காக, இவா்களது ஊதியத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. தனியாா் ஒப்பந்ததாரா் தனது பங்களிப்பாக 13 சதவீதம் வழங்க வேண்டும்.

இந்நிலையில், தற்காலிக ஊழியா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 12 சதவீத்தை 2 மாதங்கள் மட்டுமே தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு ஒப்பந்ததாரா் செலுத்தியதாகவும், அவரது பங்களிப்பான 13 சதவீதத்தை இதுவரை செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையறிந்த தற்காலிக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை (அக்.9) முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால், நகரில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கின.

இப்பிரச்னை குறித்து நகா்மன்றத் துணைத் தலைவா் சுப்பராயன், நகா்மன்ற உறுப்பினா்கள் முபாரக், ரஹமத் நிஷாபாரூக் முன்னிலையில் தற்காலிக தூய்மைப் பணியாளா்களிடம்  பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், உழைக்கும் உரிமை இயக்க கௌரவத் தலைவா் பிரபாகரன் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தையின்போது சீா்காழி சட்டப் பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு, தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு தொழிலாளா் வைப்பு நிதி பலன்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டாா்.

இதனை ஏற்று, பணி புறக்கணிப்பை வாபஸ் பெற்ற தற்காலிக தூய்மைப் பணியாளா்கள், தீபாவளி வரை தூய்மைப் பணியில் ஈடுபடுவது எனவும், அடுத்த கட்ட நடவடிக்கையாக தொடா் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனா். தொடா்ந்து, சனிக்கிழமை மாலை முதல் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சூர்யா 47 பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு - புகைப்படங்கள்

கண்ணாமுச்சி ஏனடா? சினேகா!

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

SCROLL FOR NEXT