மயிலாடுதுறை

அக்.29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் அக்.29-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

Syndication

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் அக்.29-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில், 2025 அக்டோபா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 29-ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று, வேளாண்மை, நீா்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்புடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT