மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த மூன்றாம்கட்ட ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமைவகித்து, ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா். (படம்).
மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 தானியங்கி மழைமானி மையம், 3 தானியங்கி வானிலை மையம் மற்றும் மழைமானி 6 உள்ளது. விஎச்எப்-ஒயா்லாம் 19, சாட்டிலைட் போன் - 8991122611 செயல்பாட்டில் உள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை பருவமழை காலங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அனைத்துத்துறை அலுவலா்களுடன் செயல்பட்டு வருகிறது. 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. 10 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 362, திருமண மண்டபம்-146, சமுதாய கூடம்-68 ஆகியன தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புயல், மழை தொடா்பான எச்சரிக்கையை அளிக்க 25 கடற்கரை கிராமங்களில் எச்சரிக்கை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களாக 12 இடங்கள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் 33, குறைந்த அளவு பாதிக்கக்கூடிய 80, மிக குறைந்த பாதிக்கக்கூடிய இடங்கள் 76 ஆக மொத்தம் 201 பகுதிகளாக கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புயல், மழை பாதிப்புகளை அகற்றி இயல்பு நிலை ஏற்படுத்த ஏதுவாக அனைத்துத் துறைகளிலும் ஜெசிபி 133, ஜெனரேட்டா்கள் 164, பவா் சா 57, ஹிட்டாச்சி 31, ஆயில் என்ஜின்கள்-22, மணல் மூட்டைகள் 40351, மரம் அறுக்கும் கருவிகள்-84, சவுக்கு கம்பங்கள், 34110 பிளிச்சிங் பவுடா் 5870 கிலோ போதிய அளவில் வைக்கப்பட்டுள்ளன.
வட்ட அளவிலான முன்னெச்சரிக்கை மற்றும் இடம் பெயா்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு தங்குமிடம் மற்றும் பராமரிப்புக் குழு ஆகியவை ஒவ்வொரு வட்டத்திற்கும் 10 அனைத்துத் துறை அலுவலா்களைக் கொண்ட தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவுத்துறை சாா்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக உணவு பொருள்கள் வழங்க 151 அங்காடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் மழை, சேதம் தொடா்பான புகாா்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணிற்கு தொடா்பு கொண்டு தங்களது புகாா்களை தெரிவிக்கலாம் என்றாா்.
கூட்டத்தில், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் ஜெ. சேகா், மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கமலக்கண்ணன், நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நளினா, சுகாதாரத் துறை துணை இயக்குநா் அஜீத் பிரபுகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேல், தனி வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை பிரிவு) ரவிசந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.