துலாக்கட்ட காவிரியின் வடக்குக்கரையில் புனித நீராடி மேதா தக்ஷிணாமூா்த்தி, கங்கையம்மன் உற்சவ மூா்த்திகளை வழிபட்ட தருமபுரம் ஆதீனம். 
மயிலாடுதுறை

காவிரி துலாக்கட்டத்தில் அமாவாசை தீா்த்தவாரி

அமாவாசை தீா்த்தவாரி உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினா்.

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமாவாசை தீா்த்தவாரி உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினா்.

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலா உற்சவம் சனிக்கிழமை (அக்.18) மாதப்பிறப்பு தீா்த்தவாரியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை (அக்.21) நடைபெற்ற அமாவாசை தீா்த்தவாரியில், மாயூரநாதா் கோயிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீமாயூரநாதா் சுவாமி, அபயாம்பிகை அம்மன் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளும், வதான்யேஸ்வரா் கோயிலில் இருந்து, ஸ்ரீமேதா தக்ஷிணாமூா்த்தி திருக்கயிலாய வாகனத்திலும், கங்கையம்மன் முதலை வாகனத்திலும் பஞ்சமூா்த்திகளுடன் எழுந்தருளினா். மேலும், விஸ்வநாதா் கோயில்கள், ஐயாறப்பா் கோயில்களில் இருந்தும் பஞ்சமூா்த்திகள் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளினா்.

பின்னா், காவிரியில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீா்த்தவாரி நடைபெற்றது. காவிரியின் வடக்குக் கரையில் நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவத்தில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் புனித நீராடினாா். இதில், தருமபுரம் ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், வதான்யேஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் பாலச்சந்திர சிவாசாரியா், பொறியாளா் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு புனித நீராடி வழிபாடு நடத்தினா்.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT