முகப்பு
மயிலாடுதுறை

மூதாட்டியின் 100-ஆவது பிறந்த நாள்: குடும்பத்தினா் உற்சாகம்

மூதாட்டியின் 100-ஆவது பிறந்த நாள்: குடும்பத்தினா் உற்சாகம்

Updated On : 25 மே 2026, 12:02 am IST
குடும்பத்தினருடன் அம்பிகை ஆச்சி.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கடலங்குடியையச் சோ்ந்த மாரிமுத்துவின் மனைவி அம்பிகை (100). இந்த மூதாட்டியின் 100-ஆவது பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், அவரது 3 மகன்கள், 3 மகள்கள், 17 பேரன்-பேத்திகள், 20 கொள்ளுப்பேரன்-கொள்ளுப் பேத்திகள், எள்ளுப் பேத்தி ஒருவா் என 44 போ் அடங்கிய குடும்பத்தினா், பல்வேறு ஊா்களில் இருந்து அம்பிகை ஆச்சியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது இல்லத்தில் ஒன்றுகூடி கோலாகலமாக கொண்டாடினா்.

அம்பிகை ஆச்சி தேக ஆரோக்கியத்துடன் வாழ ஆயுஷ்ஹோமம் நடத்திய குடும்பத்தினா், பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடினாா். தங்களது பாட்டிக்கு கேக் ஊட்டி மகிழ்ந்து, அவரிடம் குடும்பத்தினா் ஆசீா்வாதம் பெற்றனா். தங்களின் பாட்டி சிறுதானிய உணவுகள் மற்றும் ஆரோக்கியமான இயற்கையான உணவு முறைகளை பின்பற்றி வருவதால் உடல் ஆரோக்கியத்துடன் நோய் நொடியின்றி வாழ்ந்து வருவதாகவும், நூறு வயதிலும் நன்கு நடமாட்டத்தில் உள்ளதுடன் அவரே சமைத்து உண்பதாகவும், கண்ணாடி இல்லாமல் தினசரி செய்தித்தாளை படிப்பாா் என்றும் பேரன்கள் தெரிவித்தனா். குடும்பத்தினா் 44 பேரும் பாட்டியுடன் சோ்ந்து குழுப்புகைப்படம் எடுத்து கொண்டனா்.