நாகப்பட்டினம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மன்னார்குடி ஒன்றியக்குழு கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா மன்னார்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மன்னார்குடி ஒன்றியக்குழு கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா மன்னார்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு அமைப்பின் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞர் மன்ற செயலாளர் எஸ்.பாப்பையன், நகரச் செயலர் எஸ்.சார்லஸ்விக்டர் முன்னிலை வகித்தனர்.
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்டவைகளுக்கான சிறப்பு மருத்துவர்களையும், அறுவை சிகிச்சைக்கான மருத்துவரையும் உடனடியாக நியமிக்க வேண்டும். எக்ஸ்ரே, இசிஜி, ஸ்கேன் உள்ளிட்ட கருவிகளை 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற ஜூன் 24-ஆம் தேதி மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மத்திய,மாநில அரசுப் பணிகளில் உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 15-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கும் பிரசார நெடும்பயணக்குழு, ஜூலை 21-ஆம் தேதி மன்னார்குடிக்கு வருகை தரும்போது சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.வீரமணி, மன்ற உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை வழங்கினர்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலர் வி.கலைச்செல்வன், மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை அருள்ராஜன், நிர்வாகி எஸ்.பாலமுருகன் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT