வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகர் கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவையோட்டி, தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மரத்தேர் சிதிலமடைந்ததால், கடந்த 11 ஆண்டுகளாக தேரோட்டம் தடைபட்டிருந்தது. இந்நிலையில், சென்னை போரூர் ஸ்ரீ வைத்தியநாதசுவாமிகளின் உபயமாக கோயிலுக்கு புதிய மரத்தேர் செய்து தரப்பட்டதையடுத்து தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனிடையே, கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாகப் பெருவிழா மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
தேரில் முருகப்பெருமான் எழுந்தருளியதும், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.