நாகப்பட்டினம்

நீடாமங்கலம் சதுரங்க வல்லபநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் கற்பகவல்லி ராஜராஜேஸ்வரி உடனுறை சதுரங்க வல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் கற்பகவல்லி ராஜராஜேஸ்வரி உடனுறை சதுரங்க வல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு கடந்த 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதிவரை விக்னேஸ்வர பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமங்களும், 5-ஆம் தேதி முதல் யாகசாலை முதல் கால பூஜைகள் தொடங்கி நடந்தது.
8-ஆம் தேதி வியாழக்கிழமை காலை ஆறாம் கால பூஜைகள் நிறைவடைந்து காலை 8 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் பரிவார விமானங்கள் மகா கும்பாபிஷேகம், காலை 8.15 மணிக்கு மூலஸ்தான சுவாமி அம்பாள் சாமுண்டி அம்மன் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்பாடும் நடைபெற்றது. யாகசாலை நேரங்களில் தேவார இன்னிசை நாகசுர இன்னிசை கச்சேரியும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறையினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம் போலீஸார் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT