நாகப்பட்டினம்

மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மன்னார்குடியில் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மன்னார்குடியில் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற ராகுல்காந்திக்கு, அனுமதி மறுத்த போலீஸார், அவரை கைது செய்தனர்.
இதைக்கண்டித்து, மன்னார்குடி மேலராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் ஆர் .கனகவேல் முன்னிலை வகித்தார். இதில் வட்டாரத் தலைவர் எஸ்.செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன், தொழிற்சங்க நிர்வாகி பஞ்சன், நகர பொதுச் செயலர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT