நாகப்பட்டினம்

மூதாட்டி சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றம்: மகன் கைது

வேதாரண்யம் அருகே மூதாட்டி சாவில் அவரது மகன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

DIN

வேதாரண்யம் அருகே மூதாட்டி சாவில் அவரது மகன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
குரவப்புலம் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ரெத்தினம் (70). பாலகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டார். இவர்களது மகன்கள் சுப்பிரமணியன், முத்துராமன் (41). மூத்த மகன் சுப்பிரமணியன் இறந்துவிட்ட நிலையில் மருமகள் உள்ளிட்ட குடும்பத்தாருடன் வசித்து வந்த ரெத்தினத்தை, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இளைய மகன் முத்துராமன் அவரது வீட்டுக்கு அழைத்து சென்றாராம். இதற்கிடையில், குடும்பத்தில் சொத்துப்பிரச்னை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரெத்தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக, மூத்த மருமகள் காந்திமதி (38) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வேதாரண்யம் போலீஸார், ரெத்தினம் சாவை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், பிரேத பரிசோதனையில் ரெத்தினத்தின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் சொத்து பிரச்னை தொடர்பாக கல்லால் தாக்கி ரெத்தினம் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த போலீஸார், இதுதொடர்பாக ரெத்தினத்தின் இளைய மகன் முத்துராமனை வியாழக்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT