நாகை மாவட்டம், செம்பனார்கோயிலில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் வேன் மோதி உயிரிழந்தார்.
தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் அருகேயுள்ள முடிகண்டநல்லூர், அண்ணாநகரைச் சேர்ந்தவர் வீ. செல்வராஜ் (47). இவர், மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் செம்பனார்கோயில் சிவன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் செல்வராஜ் (47) நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து, செம்பனார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாதவனை (28) கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.