நாகப்பட்டினம்

குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வெண்மனச்சேரியில் 10 கைப்பம்புகள் அமைக்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்குள்பட்ட வெண்மனச்சேரியில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க புதிதாக 10 கைப்பம்புகள் அமைக்க

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்குள்பட்ட வெண்மனச்சேரியில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க புதிதாக 10 கைப்பம்புகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்தார்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்குள்பட்ட வெண்மனச்சேரி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அவர் மேலும் பேசியது:
அரசுத் துறைகளின் திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கவும், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை அரசுத் துறை அலுவலர்கள் நேரில் பெற்று தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மக்கள் தொடர்பு முகாம்கள் பெரிதும் பயன்படுகின்றன.
தற்போது, பொது சேவை மையங்கள் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்துச் சான்றிதழ்களும் கணினி மூலம் உடனுக்குடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் அம்மா திட்ட முகாம்கள் மூலம், அந்தந்த கிராம மக்களுக்குத் தேவையான சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று ஆகியன உடனுக்குடன்
வழங்கப்படுகிறது.
நிகழாண்டில் நிலவும் வரலாறு காணாத வறட்சியின் காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, வெண்மனச்சேரி மற்றும் சுற்றுப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் 10 கைப்பம்புகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் ஆட்சியர் சு. பழனிசாமி.
இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறை, சமூகப் பாதுகாப்புத் திட்டம், சமூக நலத் துறை, வேளாண் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை ஆகியவற்றின் சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ. 4.48 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 66 மனுக்கள் பெறப்பட்டு, 52 மனுக்கள் நடவடிக்கைக்கு ஏற்கப்பட்டன.
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் கோ. தேன்மொழி, மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மையுண்ட கண்கள்... பிரணிதா!

எண்ணத்தின் தழுவல்கள்... சுஷ்ரி மிஸ்ரா

மஞ்சள் பூக்கள்... ரவீனா தாஹா!

நாணத்தில் கண்டேன்... ரித்தி குமார்

புதிய புன்னகை... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT