நாகப்பட்டினம்

தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு எம்எல்ஏ உதவி

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே செவ்வாய்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு

DIN

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே செவ்வாய்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினார்.
மயிலாடுதுறை வட்டம், மறையூர் ஊராட்சிக்குட்பட்ட சிறுகோவங்குடி கிராமத்தில் மின்கசிவு காரணமாக செவ்வாய்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில், சாந்தா (50), பிரபு (32),  கலியமூர்த்தி (55), அறிவழகன் (52) ஆகியோரின் குடிசை வீடுகள் தீக்கிரையாகின. இதில் வீட்டு உபயோகப் பொருள்கள், முக்கிய ஆவணங்கள் அனைத்தும் நாசமாயின.
இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் ரூ.5 ஆயிரம் ரொக்கம், 10 கிலோ அரிசி, வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை வட்டாட்சியர் (பொறுப்பு) கே. இளங்கோவன்,  வருவாய் ஆய்வாளர் இளம்பரிதி, கிராம நிர்வாக அலுவலர் சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கமே.. சம்யுக்தா ஷான்!

மலரில் மலர்ந்த கனவு... அய்ரா கிருஷ்ணா!

மாஞ்சோலை... அனீத்!

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகே... ஸாரா யஸ்மின்!

அமைதி கிடைத்த இடம்... செளந்தர்யா!

SCROLL FOR NEXT