நாகப்பட்டினம்

நாகூர் சீராளம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

நாகை அருகேயுள்ள நாகூர் சீராளம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

நாகை அருகேயுள்ள நாகூர் சீராளம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
நாகூரில் உள்ள சீராளம்மன் கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
நாகூர் நாகநாதர் கோயிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட பெண்கள், மியான் தெரு வழியாக சீராளம்மன் கோயிலை அடைந்தனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் காவல்துறை தலைவர் செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உள்ளிட்டோர் பங்கேற்று, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இதில் சுமார் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவில் தினசரி பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 26 ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

SCROLL FOR NEXT