நாகப்பட்டினம்

மயூரநாதர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
சிவபுரம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும்  பாடசாலை மாணவர்கள் ஏற்பாட்டின்பேரில் இந்த சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கோயிலில் உள்ள வருண பகவானுக்கு சிறப்பு பூஜையும், அதைத் தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றன. திருக்கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் பாடசாலை மாணவர்கள் 13 பேர் இறங்கி, கழுத்தளவு நீரில் நின்று வருண ஜெபம் செய்தனர்.
நிகழ்ச்சியில்,எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் த. கஜேந்திரன், சிவபுரம் வேத சிவாகம பாடசாலை மாணவர்கள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT