நாகப்பட்டினம்

சீர்காழி சேந்தங்குடி ரயில்வே மேம்பால பணிகள் நிறைவு

சீர்காழி சேந்தங்குடி ரயில்வே மேம்பால பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதை அடுத்து விரைவில் வாகன போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

DIN

சீர்காழி சேந்தங்குடி ரயில்வே மேம்பால பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதை அடுத்து விரைவில் வாகன போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் சேந்தங்குடி பகுதியில் ரயில்வே கிராசிங் உள்ளது. இந்த ரயில்வே கிராசிங்கை கடந்துதான் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, சென்னை செல்லும் பேருந்துகள், இதர வாகனங்கள் செல்கின்றன.
ரயில் வரும் நேரங்களில் இப்பகுதி ரயில்வே கேட் மூடப்படும் நிலையில், நீண்ட தூரத்துக்கு நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.50 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2012-ஆம் ஆண்டு தொடங்கியது.
பாலப் பணிகள் தொடங்கி 5 ஆண்டுகளைக் கடந்த நிலையில், பணிகள் நிறைவடையாமல் இருந்ததால் அப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள், விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ரயில்வே மேம்பால பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர காலதாமதம் ஏற்பட்டால், விவசாயிகளை திரட்டி தாங்களே பாலத்தை திறப்போம் என அண்மையில் காவிரி பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்தார். அப்போது நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் மே 15-ஆம் தேதிக்குள் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து விடும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்திருந்தனர்.
தற்போது அப்பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் மேம்பாலம் மற்றும் இணைப்புச் சாலைகள் அனைத்தையும் தார்ச் சாலைகளாக அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள பணிகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் கூறியது:
ரயில்வே மேம்பால பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது ரயில்வே பாதையை பாதசாரிகள் கடக்க முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்படும். இந்நிலையில் அவர்களின் பயன்பாட்டுக்காக பாலத்தின் பக்கவாட்டில் படிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கைப்பிடி சுவர் அமைக்க மணல் தேவைப்படும் நிலையில், தற்போது மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதை அடுத்து இப்பணி தாமதம் ஆகி வருகிறது. விரைவில் இப்பணியும் நிறைவடைந்துவிடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT