நாகப்பட்டினம்

வேதாரண்யம் ஏரி வடகரை சாலையை மேம்படுத்த வலியுறுத்தல்

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியின் வடகரை சாலையை மேம்படுத்த வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

DIN

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியின் வடகரை சாலையை மேம்படுத்த வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு தலைவர் வி.வீரசுந்தரம், செயலாளர் சு. செல்வராசு ஆகியோர் தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனு:
வேதாமிர்த ஏரியை சீரமைக்க நிதி ஒதுக்கீடுக்கு பரிந்துரை செய்ததை வரவேற்கிறோம். இந்த பணியோடு ஏரியின் வடகரை, மேல் கரையில் சாலை அமைத்து, மேல்கரை, தென்கரை சந்திப்பில் நீர் வழிப்பாதையில் உள்ள மதகை சீரமைக்க வேண்டும். அத்துடன், ஏரியின் தென்கரையில் இருந்து கடற்கரை பகுதிக்குச் செல்லும் வடிகால் வாய்க்காலை முறையாக அளவீடு செய்து, சீரமைக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT