ஈமக்கிரியை உதவித் தொகைக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம் என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ இனத்தவர் இறந்தால், இறந்தவரின் ஈமக்கிரியை செய்ய ரூ. 2,500 உதவித் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஈமக்கிரியை மானியத்துக்காக நாகை மாவட்டத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உதவித் தொகை பெற விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 40 ஆயிரத்துக்குள்பட்டிருக்க வேண்டும். தகுதியானவர்கள், தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன், ஊராட்சி தனி அலுவலர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) அணுகலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.