நாகப்பட்டினம்

தாடாளன்பெருமாள் கோயிலில் உதய கருடசேவை உத்ஸவம்

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் உதய கருடசேவை  புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் உதய கருடசேவை  புதன்கிழமை நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் பெருமாள் லோகநாயகி தாயாருடன் காட்சி தருகிறார். இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடைபெறும் பவித்ரோற்ஸவம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 5-ஆம் நாளான புதன்கிழமை உதயகருடசேவை நடந்தது. முன்னதாக, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து திருஆபரணங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா மற்றும் தீர்த்தவாரி, சாத்துமுறை வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்செய்தனர். ஏற்பாடுகளை கே.கே.சி. ஸ்ரீனிவாச்சாரியார் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT