நாகப்பட்டினம்

நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு

நாகை அருகேயுள்ள அக்கரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜே. ஜார்ஜ் ஆப்ரகாம் லிங்கன், நல்லாசிரியர் விருது பெற்றதுக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நாகை அருகேயுள்ள அக்கரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜே. ஜார்ஜ் ஆப்ரகாம் லிங்கன், நல்லாசிரியர் விருது பெற்றதுக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக ஜே. ஜார்ஜ் ஆப்ரகாம் லிங்கன் உள்ளார். இவர், 1986 இல் முதுகலை ஆசிரியராக நியமனம் பெற்று 2011 முதல் தலைமையாசிரியராக உள்ளார். மேலும், அக்கரைப்பேட்டை பள்ளியில் 16 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தமிழக அரசு, இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கியுள்ளது. விருது பெற்ற தலைமையாசிரியரை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. ஜெயபால், பொருளாளர் கோடிமாரி, துணைத் தலைவர் வீரமுத்து, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மனோகரன், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் சங்கர், ஊர் பஞ்சாயத்தார்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT