வேதாரண்யத்தில், நீட் தேர்வு முறைக்கு எதிராக வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். நீட் தேர்வு முறையை ரத்து செய்யவும், அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், வழக்குரைஞர்கள் பாரிபாலன், அறிவுச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.