நீட் தேர்வுக்கு தார்மிகப் பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த. ஜெயராமன் கூறினார்.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான த. ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியது:
மருத்துவ கல்லூரியில் சேர முடியாத விரக்தியால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறுவது தவறானதாகும். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை, மாணவி அனிதா தனது இறப்பின் மூலம் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாளையங்கோட்டையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தமிழகத்துக்கு நீட் வராது என உறுதிப்படத் தெரிவித்திருந்தார். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடப்பதாகக் கூறும் தமிழக அரசு நீட் தேர்வுக்கு தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.