நாகப்பட்டினம்

மண்டல அளவிலான சதுரங்கப் போட்டி: ஏவிசி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பதக்கம்

அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இடையேயான சதுரங்கப் போட்டிகள் ஏவிசி பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.

DIN

அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இடையேயான சதுரங்கப் போட்டிகள் ஏவிசி பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.
மண்டல அளவில் நடைபெற்ற  இப்போட்டியில் 15 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்  பங்கேற்றனர். போட்டிகளை மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி. பாலசுப்பிரமணியன், டீன் முனைவர் ஜி. பிரதீப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில், ஏவிசி பொறியியல் கல்லூரி மாணவியர்  தங்கப் பதக்கமும், மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏவிசி கல்வி நிறுவங்களின் தலைவர் டாக்டர் என். விஜயரங்கன், செயலர் கே. கார்த்திகேயன் ஆகியோர் பதக்கங்களை வழங்கிப்  பாராட்டுத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், கல்லூரியின் நிர்வாக  இயக்குனர் முனைவர் கே.செந்தில்முருகன், துணைமுதல்வர் முனைவர் செல்வமுத்துக்குமரன், டீன் முனைவர் எஸ். விஜயராஜ், உடற்கல்வி இயக்குநர் முத்துக்குமரன், ஆலோசகர் வி. பாஸ்கரன் மற்றும் பேராசிரியர்கள்,  மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT