நாகப்பட்டினம்

மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது

சீர்காழி அருகே கீழமூவர்கரையில் மீன் வறுத்து தராததால் ஆத்திரமடைந்து  மனைவியை அடித்து கொன்ற கணவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

DIN

சீர்காழி அருகே கீழமூவர்கரையில் மீன் வறுத்து தராததால் ஆத்திரமடைந்து  மனைவியை அடித்து கொன்ற கணவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (37).  இவருடைய மனைவி செல்வராணி (35). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.  கடந்த 5-ஆம் தேதி இரவு கலைச்செல்வன் தன்னுடைய வீட்டில் சாப்பிடும்போது சாப்பாட்டில் மீன் வறுவல் ஏன் செய்யவில்லை என்று கேட்டு மனைவி செல்வராணியிடம் தகராறு செய்தார்.
வாய்த்தகராறு முற்றிப்போகவே  கோபமடைந்த கலைச்செல்வன்  மரக்கட்டையால் மனைவியை தாக்கினாராம். இதில்  காயமடைந்த செல்வராணி  சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  பின்பு தீவிர சிகிச்சைக்காக  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை செல்வராணி இறந்தார். இதுகுறித்து திருவெண்காடு போலீஸ் (பொறுப்பு)  இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்குப்பதிவு செய்து கணவர் கலைச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி
வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT