ரூ. 50 லட்சம் வரை வரி கிடையாது என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
சீர்காழி நகர வர்த்தக சங்க கட்டடத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நவநீதன், சீர்காழி வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.கே.ஆர். சிவசுப்ரமணியன் முன்னிலை
வகித்தனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேசியது: வருகிற 26-ஆம் தேதி மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் சென்னையில் கூடுகிறது. இதில் மாநில துணைத் தலைவராக சீர்காழி சிவசுப்ரமணியன் தேர்வு செய்யப்பட இருகிறார்.
ஜிஎஸ்டி கணக்கு சமர்பிக்க இரண்டு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் கணக்குகளை வழங்கவில்லை என்றால் 200 சதவீதம் அபராதம் வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி விதிப்பது தொடர்பாக வர்த்தகர்களை அழைத்து பேசவில்லை. டாடா, பிர்லா போன்றவர்களை அழைத்து பேசி உள்ளனர். ரூ. 20 லட்சம் வரை வரி கிடையாது என்பதை மாற்றி, ரூ. 50 லட்சம் வரை வரி கிடையாது என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஜி.எஸ்.டி வரியை எதிர்க்க அனைத்து வியாபாரிகளும் தயாராக வேண்டும் என்றார்.
இதில் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் துரைராஜன், ஹரக்சந்த், கியான்சந்த், அன்வர்அலி, செயற்குழு உறுப்பினர் சோலை, தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.