நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கீழ்வேளூர் அருகேயுள்ள தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
தேவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரியலூர் மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, அரியலூர் மாணவி அனிதாவின் மறைவுக்காக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.