நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் இன்று தேர் பவனி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி வியாழக்கிழமை இரவு நடைபெறுகிறது.

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி வியாழக்கிழமை இரவு நடைபெறுகிறது.
கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா அக். 29-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சியாக தினமும் பகல் 12 மணிக்கு கொடியேற்றம் மற்றும் பல்வேறு மொழிகளில் திருப்பலி நிறைவேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அலங்கார திருத்தேர் பவனி வியாழக்கிழமை இரவு நடைபெறுகிறது. கூட்டு திருப்பலி, மாதா மன்றாட்டு உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், இரவு சுமார் 7.30  மணிக்கு தேர் பவனி தொடங்கப்படுகிறது.
பேராலய ஆண்டுப் பெருவிழா திருத்தேர் பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம் என்ற வகையில், பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர் பவனியில் பங்கேற்பதற்காக திரளான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கடந்த சில நாள்களாக பாதயாத்திரையாக வேளாங்கண்ணி வருகின்றனர். பக்தர்களின் வருகையால், வேளாங்கண்ணி பகுதி முழுமையும் களை கட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 58 போ் கைது

சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய செவிலியா் கைது

SCROLL FOR NEXT