நாகப்பட்டினம்

விஷ வாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசியல் கட்சியினர் ஆறுதல்

DIN


நாகையில் புதை சாக்கடை கிணற்றிலிருந்து வெளியேறிய விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் இருவரின் குடும்பத்துக்கு நாகை
எம்.எல்.ஏ மற்றும் அரசியல் கட்சியினர் சனிக்கிழமை ஆறுதல் தெரிவித்தனர்.
நாகை, நம்பியார் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள ஒரு புதை சாக்கடை கிணற்றில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களான நாகூர் அமிர்தா நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஆர். மாதவன்(38), நாகை, காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த என். சக்திவேல்(27) ஆகிய இருவரும், புதை சாக்கடை கிணற்றிலிருந்து வெளியான விஷ வாயு தாக்கி நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
இப்பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு தொழிலாளரான வெளிப்பாளையம், வண்டிப்பேட்டையைச் சேர்ந்த த.ஸ்ரீதர்(40)  மூச்சுத் திணறல் ஏற்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார்.
ஆறுதல்..
மாதவன் மற்றும் சக்திவேல் ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்குப் பின்னர், சனிக்கிழமை காலை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 
நாகை சட்டப் பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி,  முன்னாள் அமைச்சர்கள் ஆர். ஜீவானந்தம், கே.ஏ. ஜெயபால், அதிமுக நாகை நகரச் செயலாளர் தங்க. கதிரவன் ஆகியோர் சனிக்கிழமை காலை அரசு மருத்துவமனைக்குச் சென்று, மாதவன் மற்றும் சக்திவேலின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர், விஷ வாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர் ஸ்ரீதரை அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி, உரிய மருத்துவ சிகிச்சைகளை உறுதி செய்யுமாறு மருத்துவர்களைக்கேட்டுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாஸ்மாக் கடையில் மதுப் புட்டிகள் திருட்டு

தமிழ்ப் புத்தாண்டு: மன வளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு

ரஷ்யாவில் கடும் வெள்ளம் - புகைப்படங்கள்

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT