நாகப்பட்டினம்

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

DIN

சீர்காழி கொள்ளிட முக்கூட்டுப் பகுதியில் உள்ள டாஸ்மாக் மது கடையை அகற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சி நாகை மாவட்டச் செயலாளர் ரமேஷ், மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மணியிடம்  அண்மையில் அளித்த கோரிக்கை மனு:
சீர்காழி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் கொள்ளிட முக்கூட்டுப் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த பகுதியில் தாடாளன் பெருமாள் கோயில், பள்ளிவாசல் ஆகிய மத வழிப்பாட்டு தலங்கள் அமைந்துள்ளதால், பக்தர்களுக்கு டாஸ்மாக் கடையால் பெரும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகளும் மதுப் பிரியர்களால் பாதிக்கப்
படுகின்றனர்.
எனவே இந்தக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே ரூ 1.34 லட்சம் பறிமுதல்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

‘இந்தியா’ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமைச்சா் எஸ். ரகுபதி

ஹேம மாலினி குறித்து தரக்குறைவாக பேச்சு: ரண்தீப் சுா்ஜேவாலா 2 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபட தடை

காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

SCROLL FOR NEXT