நாகப்பட்டினம்

சீர்காழியில் ரூ.2.47 கோடியில் குடிமராமத்துப் பணிகள்

DIN


சீர்காழி பகுதியில் ரூ.2.47 கோடியில் குடிமராமத்துப் பணிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலத்தில் குடிமராமத்துப் பணிகள் குறித்து விவசாயிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வி. சண்முகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. உதவி பொறியாளர்கள் கேசவராஜ், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில், சீர்காழி பகுதியில் வைத்தீஸ்வரன்கோயில் கிராமத்தில் ரூ.32 லட்சத்தில் கோவிந்தகாவிரி கீழ்குமிழி புதிதாக அமைத்து வாய்க்கால் தூர்வாரும் பணி, சேமங்கலம் மற்றும் நாங்கூர் கிராமத்தில் அய்யவையனாறு தலைப்பு மதகு புதுப்பித்தல், தற்காப்பு சுவர் அமைத்தல் பணிகள் ரூ. 25 லட்சத்திலும், குமாரநத்தம் கிராமத்தில் பாப்பான் ஓடை வாய்க்கால் பிரிவு, குமாரநத்தம் சர்ப்பிளஸ் ரெகுலேட்டர் புதுப்பித்தல், தற்காப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.25 லட்சத்திலும், பெருமங்கலம் கிராமத்தில் கோவிந்தகாவிரி வாய்க்கால் தலைப்பு மதகு சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் ரூ.30 லட்சத்திலும், சந்தைவெளி, எருமல் காக்கையாறு, பாப்பானோடை ஆண்டிவாய்க்கால், புதுமண்ணியாறு, பொறைவாய்க்கால், கழுமலையாறு, சிவனார்விளாகம் உள்ளிட்ட பாசன வாய்க்கால்கள் என 11 குடிமராமத்துப் பணிகள் ரூ.2.47 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது எனவும், குடிமராமத்துப் பணிகளை விவசாயிகள் விரைந்து முடித்திட வேண்டும் எனவும் கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் அறிவுறுத்தினார்.
இதில் குமாரநத்தம் பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்கத் தலைவர் முருகேசன், எருமல் வாய்க்கால் பாசன விசாயிகள் சங்கத் தலைவர் கல்யாணம், பெருமங்கலம் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன், பாப்பானோடை ஆண்டிவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரும் அச்சப்பட வேண்டாம்: பெரிய திட்டங்களுடன் 3-வது முறை ஆட்சி -பிரதமர் மோடி

நாமக்கல்: முட்டை நகரில் முக்கோணப் போட்டி!

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை!

பாயும் ஒளி நீ எனக்கு...

SCROLL FOR NEXT