மயிலாடுதுறை அருகே நீடூரில் பள்ளி மாணவர்களுக்கு முதலுதவி செயல்முறை விளக்கம் புதன்கிழமை அளிக்கப்பட்டது.
நீடூர், அல்- பிரிலியண்ட் மெட்ரிக். பள்ளியில், முதலுதவி மற்றும் அவசர நேரத்தில் எவ்வாறு உதவி பெறுவது, உதவி செய்வது, ஆம்புலன்ஸ் என்றால் என்ன? 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்பது குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நாகை மாவட்ட அவசர பிரிவு உதவி மேலாளர் பாரதிராஜா மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக செயல்முறை விளக்கம் அளித்தார். இந்த செயல்முறை விளக்கத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர், முதலுதவி பயிற்சி பெற்ற வல்லுநர்கள் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர்.
மாணவர்கள் புத்தகத்தில் உள்ளவாறு மனனம் செய்து பலனில்லை. மாறாக அவர்களைச் சுற்றி உள்ள தேவையை நன்கு புரிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்த முகாமின் நோக்கம் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ரோகிணிமணி கூறினார். இதில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், அரபிக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.