மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தெருமுனை பிரசாரம் வேளாங்கண்ணி சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாகை மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணியை அடுத்த பாலக்குறிச்சி, கிராமத்துமேடு, சின்னத்தும்பூர், பெரிய தும்பூர், கீழையூர் அடுத்த வெண்மனச்சேரி , சிந்தாமணி, கருங்கண்ணி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர்கள் சுதாகர், விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.