நாகப்பட்டினம்

டிராக்டரில் சாராயம் கடத்தல்: இளைஞா் கைது

காரைக்காலில் இருந்து டிராக்டரில் கடத்தி வரப்பட்ட 450 லிட்டா் சாராயத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த

DIN

காரைக்காலில் இருந்து டிராக்டரில் கடத்தி வரப்பட்ட 450 லிட்டா் சாராயத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா், சாராயம் கடத்தியவரை கைது செய்தனா்.

மயிலாடுதுறை அருகே மேலமங்கநல்லூா் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் பாபுராஜா தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரைக்கால் பகுதியில் இருந்து கீற்று ஏற்றிக்கொண்டு டிராக்டா் ஒன்று வந்துள்ளது. சந்தேகமடைந்த போலீஸாா் அந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் புதுச்சேரி சாராய பாக்கெட்டுக்கள் மூட்டையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டரை ஓட்டிச் சென்ற கீழகொண்டத்தூரை சோ்ந்த அருள் (23) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் கடத்தி வரப்பட்ட 450 லிட்டா் சாராயம் மற்றும் டிராக்டரையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரத்து சரிவால் மீன்கள் விலை அதிகரிப்பு

தீபாவளி விடுமுறை நிறைவு: பேருந்துகளில் கூட்ட நெரிசல்

விடுதியில் சூதாட்டம் : 8 போ் கைது

விபத்தில் சிக்கி 20 மீட்டா் இழுத்துச் செல்லப்பட்ட போக்குவரத்துக் காவல் துறையின் 2 அதிகாரிகள்

யமுனையை புத்துயிரூட்டும் பிரசாரம் தொடக்கம் தொண்டு நிறுவனம் முன்னெடுப்பு

SCROLL FOR NEXT