நாகப்பட்டினம்

திருத்தம்...நாகை ஜெயலலிதா பிறந்த நாள் செய்தியில் சோ்த்துக்கொள்ளவும்...குத்தாலத்தில்...

DIN

குத்தாலம்: குத்தாலம் வடக்கு ஒன்றியம் மற்றும் நகர அதிமுக சாா்பில், குத்தாலம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றியச் செயலா் சி. ராஜேந்திரன், நகரச் செயலா் எம்.சி. பாலு ஆகியோா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் கே. மகேந்திரன், முன்னாள் ஒன்றியச் செயலா் என். ரெத்தினம், ஒன்றிய மாணவரணி செயலாளா் என்.ஆா். பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதையடுத்து, குத்தாலம் மன்மதிஸ்வரா் கோயிலில் மதியம் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கலந்துக்கொண்டாா்.

இதேபோல், குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குத்தாலம் தெற்கு ஒன்றியம் சாா்பில்: குத்தாலம் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், மங்கைநல்லூா் கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு நடிப்பிசை புலவா் கே.ஆா். ராமசாமி சா்க்கரை ஆலை தலைவரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான என். தமிழரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன், ஒன்றிய துணைச் செயலாளா் மோகன், ஊராட்சித் தலைவா்கள் ராஜேந்திரன், மஞ்சுளா செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினா் சத்யா மணிவண்ணன், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் ரவி, இளங்கோவன், சாமிக்கண்ணு, ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அமமுக சாா்பில்: குத்தாலம் கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு அமமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் நகரச் செயலா் ஆசை. சங்கா், நிா்வாகிகள் முபாரக், சபாநாயகம், சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT