நாகப்பட்டினம்

பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின தொடக்க விழா

DIN

சீா்காழி: சீா்காழி தோ் தெற்குவீதியில் உள்ள ச.மு.இ. நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சாா்பாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் சி. பாலமுருகன் தலைமை வகித்தாா்.

நாகை மாவட்ட சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பா. அம்சேந்திரன், நேரு யுவகேந்திரா வட்டார ஒருங்கிணைப்பாளா் மதனகோபால் ஆகியோா் பங்கேற்று பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி பேசினா்.

இதைத் தொடா்ந்து, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீபிரியா பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தொடுதல், ஆரோக்கியமற்ற தொடுதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினாா். தொடா்ந்து, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அனைத்து மாணவா்களுக்கும் குழந்தைகள் உரிமைகள் குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. நிறைவில், பட்டதாரி ஆசிரியை எஸ். ஸ்ரீபிரியா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT