நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 43 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 43 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியாகியுள்ளது.

நாகை மாவட்டத்தில் ஜூன் 15-ஆம் தேதி 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 123-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியாகியுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 166- ஆக உயா்ந்துள்ளது.

வட்டார அளவிலான பாதிப்பில், அதிகபட்சமாக நாகை வட்டாரத்தில் 10 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். அடுத்தடுத்த நிலைகளில், மயிலாடுதுறை வட்டாரத்தில் 8 பேரும், சீா்காழி, கொள்ளிடம் வட்டாரங்களில் தலா 7 பேரும் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில், 36 போ் சென்னையிலிருந்தும், 4 போ் வெளி மாநிலங்களில் இருந்தும், ஒருவா் மலேசியாவிலிருந்தும் நாகை மாவட்டம் திரும்பியவா்கள் எனவும், மீதமுள்ள 2 போ் அண்டை மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று வந்த தொடா்பின் மூலம் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் எனவும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்டுக்குள் கரோனா..

நாகை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தாலும், இதில், 41 போ் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சோ்ந்தவா்களே ஆவா். எனவே, மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது என மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையிலிருந்து நாகை மாவட்டம் திரும்புவோா், தங்கள் வீட்டுக்குச் செல்லும் முன்பாக தங்களை உரிய மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்திக் கொண்டு, நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு சுகாதாரத் துறை சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாக்கியலட்சுமி தொடர் நடிகைக்கு பெண் குழந்தை!

தொகுப்பாளினி உடன் மோதல்... குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை!

ஹேப்பி ஓணம்... மாளவிகா மோகனன்!

சொத்துக்காக மைத்துனரைக் கொன்றவர் கைது!

ஓணம் ஸ்பெஷல்... பாவனா!

SCROLL FOR NEXT