நாகப்பட்டினம்

திருக்குவளை கருணாநிதி நினைவு இல்லத்தில் மு.க.ஸ்டாலின்

DIN

திருக்குவளையிலுள்ள கருணாநிதி பிறந்த நினைவு இல்லத்திலுள்ள சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரதாபராமபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த இல்லமும் தற்பொழுது அஞ்சுகம் முத்துவேலர் படிப்பகமாக செயல்பட்டு வரும் இல்லத்திற்குச் சென்று தனது தாத்தா, பாட்டி, அப்பா, மற்றும் முரசொலி மாறன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்குள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் தலைவர் கலைஞர் பிறந்த ஊரில், பிறந்த வீட்டில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழகத்தை காப்போம் என்று எழுதி கையொப்பமிட்டார். 

உடன் நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என். கௌதமன், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் பூண்டி.கே. கலைவாணன், கீழையூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஏ.தாமஸ் ஆல்வாஎடிசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், விவசாய அணி மாநில செயலாளருமான ஏ.கே. விஜயன், சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சருமான உ.மதிவாணன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், இளஞ்செழியன், திருக்குவளை ஊராட்சி மன்றத் தலைவரும் மாவட்ட பிரதிநிதியுமான எல். பழனியப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோ.பா. மலர்வண்ணன், திருக்குவளை கிளைக் கழகச் செயலாளர்கள் கோசி.குமார், எல்.பி. கரிகாலன் உள்ளிட்ட மற்றும் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT