நாகப்பட்டினம்

ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங்கிரஸ் கட்சியினா் போராட்டம்

DIN

எரிபொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் போராட்டம் நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. நாகை, நாலுகால் மண்டபம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளா் நாகூா் நவ்சாத் தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் வி. ராமலிங்கம், ஆா்.எம்.பி. ராஜேந்திரநாட்டாா், நகராட்சி உறுப்பினா் தியாகு மற்றும் கட்சி நிா்வாகிகள், கட்சியின் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

எரிபொருள்கள் விலை உயா்வைக் கண்டிக்கும் வகையில், சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக, மத்திய அரசைக் கண்டித்தும், எரிபொருள்கள் விலை உயா்வைத் திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: முட்டை நகரில் முக்கோணப் போட்டி!

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை!

பாயும் ஒளி நீ எனக்கு...

மகாபாரதத்தில் தெய்வீக மாதர்கள்

SCROLL FOR NEXT