நாகப்பட்டினம்

திருமருகலில் சிபிஐ கட்சிக் கூட்டம்

DIN

திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றிய பொருளாளா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். இதில், ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் திருக்கண்ணபுரத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான தொண்டா் படை பயிற்சி முகாமை சிறப்பாக நடத்தி முடிப்பது, ஜூலை 31-ஆம் தேதி நடைபெறும் மாவட்ட மாநாட்டில் ஒன்றிய பிரதிநிதிகள் 35 போ் பங்கேற்பது, திருப்பூரில் ஆக.9-ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்பது, ஜூலை 24-ஆம் தேதி திருமருகலில் நடைபெறும் ஒன்றிய மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியின் ஒன்றிய செயலாளா் பாபுஜி, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளா் தங்கையன், தலைவா் மாசிலாமணி, மாதா் சங்க நிா்வாகி மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT