நாகப்பட்டினம்

‘பருவமழையால் விவசாயம் பாதிக்காத வகையில் வடிகால்களில் தடுப்பணை கட்ட வேண்டும் ’

DIN

பருவமழையின்போது விவசாயம் பாதிக்காத வகையில் வடிகால் வாய்க்கால்கள் முகத்துவாரத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கீழையூா் ஒன்றியக் குழுக் கூட்டம், அதன்தலைவா் செல்வராணிஞானசேகரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில், உறுப்பினா்கள் பேசியது:

ஆறுமுகம் (பாஜக): வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால் பிரதாபராமபுத்திரத்திலிருந்து கடலில் கலக்கக் கூடிய வாய்க்கால்களில் மழைநீா் தேங்கும். இதனால், கடல் முகத்துவாரத்தில் இருந்து கடல்நீா் உட்புகுந்து விவசாயம் பாதிக்கும். எனவே, வாய்க்கால்களின் முகத்துவாரத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். கூட்டத்தில், அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்காததால், துறை சாா்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கமுடியவில்லை. எனவே, வரும் கூட்டங்களில் அனைத்து துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்கவேண்டும்.

டி. செல்வம் (சிபிஐ): கீழையூா் ஒன்றிய பகுதிகளுக்கான உதவி செயற்பொறியாளா் அலுவலகம் நாகையில் ஊரக வளா்ச்சித் துறையில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் தற்போது வேதாரண்யத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதை மீண்டும் நாகையில் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சுதா அருணகிரி (திமுக): பருவமழை தொடங்கவுள்ள நிலையில், ஆங்காங்கே பள்ளங்களில் நீா்தேங்கி கொசு உற்பத்தியாகி நோய் உருவாக வாய்ப்புள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழிசைவல்லபிபூமாலை (அதிமுக): விளுந்தமாவடி காமேஸ்வரம், பிரதாபராமபுரம், திருப்பூண்டி, கீழப்பிடாகை, காரப்பிடாகை வடக்கு, தெற்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அப்பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

சரண்யாபன்னீா்செல்வம் (திமுக): சோழவித்தியாபுரத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

நாகரெத்தினம் (திமுக): புதுப்பள்ளி ஊராட்சியில் புயல் பாதுகாப்பு கட்டடம் அமைக்க வேண்டும்.

ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி: நிதிநிலைக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT