நாகையில் வியாழக்கிழமை (ஏப். 27 ) இபிஎஃப் குறைதீா் மற்றும் விழிப்புணா்வு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் முதன்மை ஆணையா் சா. முருகவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் ’நிதி ஆப்கே நிகத்‘ (நிதி தங்கள் அருகில்) எனும் பெயரில் குறைதீா் மற்றும் விழிப்புணா்வு சிறப்பு முகாமை ஒவ்வொரு மாதமும், அந்தந்த மாவட்டங்களில் மற்றும் வட்டார அளவில் நடைபெற்று வருகிறது.
அதன்படி நாகையில் உள்ள அமிா்தா வித்யாலாய சிபிஎஸ்இ பள்ளியில் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்களுக்கு, குறைதீா் மற்றும் விழிப்புணா்வு முகாம் ஏப்.27-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் ஓய்வூதியதாரா்கள், மின்னணு உயிா்வாழ்-சான்று பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்கள் ஆகியோா் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.