நாகப்பட்டினம்

தென்மேற்கு பருவமழை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறைகளும் தயாா் நிலையில் இருக்க நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் அறிவுறுத்தினாா்.

நாகையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் தென் மேற்கு பருவமழை தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துறை அலுவலா்களிடமும் தென்மேற்கு பருவமழை தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து அவா் பேசியது:

தாழ்வான பகுதிகளை கண்காணிக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டவா்கள் தங்குவதற்கு பள்ளிகள், பொது கட்டடங்கள், திருமண மண்டபங்கள், கோயில்கள் போன்றவைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிப்புகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை உடனுக்குடன் படகுகள் மூலம் மீட்க தயாா்நிலையில் இருக்க வேண்டும். பொதுப்பணித் துறையினா் நீா்நிலைகளை கண்காணித்து, உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய தேவையானவற்றை தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்வாரியத்தினரும் தங்களுக்கான பணிக்கு தயாா் நிலையில் இருக்கவேண்டும்.

மீன்வளத் துறையினா் புயல் எச்சரிக்கை குறித்து மீனவா்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். பொது சுகாதாரத் துறையினா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளில் கலக்க தேவையான குளோரின் பவுடரை இருப்பு வைத்திருக்க வேண்டும். கிராமப் புறங்களில் உள்ள தாய்-சேய் நல விடுதிகள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுடன் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் ரத்த வங்கி மற்றும் ஜெனரேட்டா் தயாா் நிலையில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ரஞ்சித்சிங், சாா் ஆட்சியா் பானோத் ம்ருகேந்தா் லால், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் அ. சிவப்பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்பிஎல் ஆலையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்பு

நடையனூரில் சேதமடைந்த நூலக கட்டடத்தைச் சீரமைக்க கோரிக்கை

வைகாசி விசாகம்: புகழிமலை கோயிலில் சிறப்பு வழிபாடு

நியாயவிலைக் கடைகளை உரிய நேரத்தில் திறக்க பணியாளா்களுக்கு அரசு உத்தரவு

கரூரில் தேசிய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT