நாகப்பட்டினம்

பாலக்குறிச்சி ஊராட்சியில் புதிய மின் மாற்றி திறப்பு

DIN

கீழையூா் அருகேயுள்ள பாலக்குறிச்சி ஊராட்சியில் புதிய மின்மாற்றி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பாலக்குறிச்சியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் குறைந்த மின்னழுத்தம் நிலவி வந்ததால் மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினா். குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் சாதன பொருட்களும் அவ்வபோது பழுதடைந்தன. குடிநீா் விநியோகத்திலும் சிக்கல் நிலவியது. அதனால் இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, 63 கி.வா. மின்திறன் கொண்ட புதிய மின்மாற்றி பாலக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி ஆகியோா் மின்மாற்றியை திறந்து வைத்தனா்.

நிகழ்வில் ஊராட்சித் தலைவா் அருணகிரி, ஒன்றிய கவுன்சிலா் லென்சோயா சிவபாதம், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆரோக்கியமேரி, நாகை செயற்பொறியாளா், மின் வாரிய ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT